
கோலாலம்பூர், டிச 24-
கிறிஸ்துமஸ் பண்டிகையின் நம்பிக்கை மற்றும் கருணையின் அடையாளமாக, DHS ஹாஸ்பிடாலிட்டி அகாடமி 100 மலேசிய இளைஞர்களுக்காக இலவசமாக ஹாஸ்பிடாலிட்டி & டூரிசம் டிப்ளமோ உதவித்தொகை மற்றும் மாதாந்திர வாழ்வுச் செலவுத் தொகை திட்டத்தை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த திட்டம் SPM, UEC அல்லது IGCSE முடித்த மலேசிய இளைஞர்களுக்காக வடிவமைக்கப்பட்டு, DHS ஹாஸ்பிடாலிட்டி அகாடமியின் இளைஞர் மேம்பாடு மற்றும் நிறுவன சமூக பொறுப்பு (CSR) முயற்சியின் ஒரு பகுதியாக செயல்படுகிறது. தகுதியான இளைஞர்களுக்கு தரமான கல்வி, சர்வதேச அனுபவம் மற்றும் நிலையான தொழில் வாய்ப்புகளை வழங்குவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
இத்திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் பெறவுள்ள வசதிகள்:
• 100% முழுமையாக அனுசரணை செய்யப்பட்ட ஹாஸ்பிடாலிட்டி & டூரிசம் டிப்ளமோ
• கோலாலம்பூரில் இருந்து சிங்கப்பூருக்கு விமானப் பயணச் செலவு
• மாதாந்திர வாழ்வுச் செலவுக்கான உதவித்தொகை
• பாடநெறி முழுவதும் கல்வி கட்டண அனுசரணை.
SPM, UEC அல்லது IGCSE முடித்த இளைஞர்களுக்கான இந்த திட்டத்தின் கீழ், தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு 100% கல்வி அனுசரணை, கோலாலம்பூரிலிருந்து சிங்கப்பூருக்கு விமானச் செலவு மற்றும் மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படும்.
இந்த முயற்சி DHS ஹாஸ்பிடாலிட்டி அகாடமியின் நிறுவன சமூக பொறுப்பு (CSR) திட்டத்தின் ஒரு பகுதியாகும். இது இளைஞர்களுக்கு சர்வதேச கல்வி அனுபவத்தையும், ஹோட்டல், சுற்றுலா, விமானம் உள்ளிட்ட சேவைத் துறைகளில் தொழில் வாய்ப்புகளையும் உருவாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்காலிக உதவிகளை விட, கல்வி மூலம் நீடித்த மாற்றத்தை உருவாக்குவது DHS ஹாஸ்பிடாலிட்டி அகாடமியின் முக்கிய நோக்கமாகும். எதிர்காலத் தலைவர்கள் மற்றும் தொழில்முனைவோர்களை உருவாக்குவதன் மூலம் சமூகத்துக்கும் தொழில்துறைக்கும் அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்குவதே இந்த முயற்சியின் இலக்கு என்று DHS ஹாஸ்பிடாலிட்டி அகாடமியின் தோற்றுனர் டாக்டர் ஸ்ரீ குமார் தெரிவித்தார்.
இத்திட்டத்தை பற்றிய விரிவான விவரங்களுக்குக்கு DHS Hospitality Career Services
www.dhsedu.asia அணுகலாம் என்று அவர் கூறினார்.

