
கோலாலம்பூர் டிச 25-
இன்று உலக முழுவதும் கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பண்டார் துன் ரசாக் கெஅடிலான் கட்சியின் உதவித் தலைவர் மற்றும் விலாயா மாநில கெஅடிலான் வியூக இயக்குனர் ஜோனதன் வேலா தமது கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளார்.
புனிதமான கிறிஸ்துமஸ் திருநாளில் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து சகோதரத்துவத்தை தொடர்ந்து பேணி காக்க வேண்டும்.
மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் கொண்டு வரும் பண்டிகையான கிறிஸ்துமஸ் அன்பு, இரக்கம் ஆகியவற்றை எடுத்துரைக்கிறது.
மனிதகுலத்தின் நலனுக்காக இயேசு கிறிஸ்து செய்த தியாகத்தை இது நினைவூட்டுகிறது.
இந்தத் தருணம் அமைதி, நல்லிணக்கம், சமத்துவம், சேவை ஆகியவற்றை வலுப்படுத்த நமக்கு ஊக்கமளிக்கிறது.
இயேசு கிறிஸ்து காட்டிய பாதையைப் பின்பற்றி, கருணையையும் நல்லிணக்கத்தையும் ஊக்குவிக்கும் ஒரு சமூகத்தை கட்டமைக்க நாம் உறுதியேற்போம் என்று அவர் தமது வாழத்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

