



பிறை, டிச 25-
மீண்டும் பள்ளிக்கு செல்லலாம் என்ற திட்டத்தின் கீழ் வசதி குறைந்த மாணவர்கள்
பயன்பெறும் வகையில் பள்ளி உபகரணங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டது.
இன்றைய சூழலில் பல குடும்பங்கள் அடிப்படை தேவைகளையே நிறைவேற்ற கடினமாகப் போராடி வருகின்ற நிலையில், பள்ளி திறக்கும் காலத்தில் தேவையான பள்ளிச் சீருடைகள், புத்தகங்கள் மற்றும் பிற பள்ளி உபகரணங்களின் விலை உயர்வு, அவர்களின் ஏற்கனவே குறைந்து வருமானத்தை மேலும் சுமையாக மாற்றி வருகிறது.
இதன் காரணமாக, பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கான தேவைகளை நிறைவேற்ற பல குடும்பங்கள் தொண்டு நிறுவனங்களின் உதவியை நாட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படிகின்றன.
இந்த சூழ்நிலையக் கருத்தில் கொண்டு, பினாங்கு இந்து இயக்கம்
( Penang Hindu Association ), கிளினிக் தர்ம சிவசந்தா ( Klinik Derma Sivasanta) டெம்பிள் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ் ( TFA) ஆகியவை, பினாங்கு மாநில அரசு மற்றும் பினாங்கு மாநகர மன்றம் (MBPP) ஆகியவற்றின் ஒத்துழைப்புடன், மீண்டும் பள்ளிக்குச் செல்வோம் என்ற சிறப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தன.
இத்திட்டத்தில் கீழ், B40 வருமானக் பிரிவைச் சேர்ந்த, பல இனங்களைச் சேர்ந்த தொடக்க, இடைநிலை மற்றும் உயர் கல்வி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்குப் பள்ளி சீருடைகள், பள்ளிப்பைகள், காலணிகள், காலுறைகள் போன்ற அவசியமான பள்ளி உபகரணங்களைப் பெறுவதற்கான “ வவுச்சர்கள்” வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியை சுங்கை பினாங் சட்டமன்ற உறுப்பினர் (ADUN) மதிப்பிற்குரிய YB. லிம் சியூ கிம் அவர்கள் தொடக்கி வைத்தார். மேலும் , பினாங்கு மாநகர மன்றத்தின் மேயர் மதிப்பிற்குரிய டத்தோ இரா. ராஜேந்திரன் அவர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்தார் .
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, தகுதியான கண் மருத்துவர்கள் மூலம் மாணவர்களுக்கு இலவய கண் பரிசோதனையும் நடத்தப்பட்டது.
அதோடு, குழந்தை நிபுணர் டத்தோ எஸ். செல்லப்பன் அவர்களால் குழந்தை பராமரிப்புக் குறித்து இலவய ஆலோசனைகள் வழங்கினார்.
மேலும், சிங்கப்பூரைச் சேர்ந்த “Friends in Charity” என்ற அரசு சாரா அமைப்பினரும் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பரிசுகளும் உதவி பொருட்களையும் வழங்கினர்.
டெம்பிள் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ் ( TFA) மற்றும் பினாங்கு இந்து இயக்கம் ( Penang Hindu Association ), கடந்த பல ஆண்டுகளாக சமூக சேவையின் ஒரு பகுதியாக, ஏழை மற்றும் தேவையுள்ள மாணவர்களுக்குப் பள்ளி சீருடைகள், காலணிகள், பள்ளி உபகரண பொருட்கள் மற்றும் பயிற்சி புத்தங்களை வழங்கி வருகின்றன.
இவ்வாண்டுக்கான “ வவுச்சர்” விநியோக நிகழ்ச்சி கடந்த வாரம் ரிவர் ரோடு, பினாங்கிலுள்ள . கிளினிக் தர்ம சிவசந்தாவில் நடைபெற்றது.
மேலும், தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ரிங்கிட் 100 வெள்ளியும் இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கு ரிங்கிட் 150 மதிப்புள்ள “வவுச்சர்கள்” வழங்கப்பட்டது.
மேலும், 150 மாணவர்களுக்குப் புதிய கல்வியாண்டான 2026 ஐ சிறப்பாகக் தொடங்குவதற்காக “ குடீ” பைகள் (Goody Bags) வழங்கப்பட்டது.
தொடர்ந்து, இன்றைய வாழ்க்கைச் செலவின் உயர்வுடன் ஒப்பிடுகையில். பெற்றோரின் சம்பளம் மற்றும் கூலி உயர்வு அதே அளவில் இல்லாதது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பள்ளி உடைகளின் விலை அதிகரித்துள்ளதால், ஏழை மாணவர்களுக்குக் கூடுதல் ஒரு ஜோடி பள்ளி சீருடை வாங்குவது பெரிய சவாலாக உள்ளது. சில குடும்பங்கள், புதிய கல்வியாண்டு தொடங்குவதற்கு முன், பள்ளி சீருடைகள் மற்றும் கல்வி உபகரணங்களை வாங்க நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர
பினாங்கு மாநில அரசு தற்போது வழங்கி வரும் உதவிகளுக்குTFA மற்றும் PHA அவர்களுக்குக் கடமைபட்டுள்ளது. அதே நேரத்தில், இத்தகைய நிதி சிரமங்களை எதிர்கொள்ளும் இன்னும் அதிகமான மாணவர்களுக்கு இம்மாதிரியான உதவி நன்மை அளிப்பதால், இவ்வுதவி தொகையை மேலும் அதிகரிக்கப்படவேண்டும் என்று இவ்வேளையில் தெரிவித்துக் கொள்கின்றன.
PHAவின் அனுபவத்தின் அடிப்படையில், சில குழந்தைகள் பள்ளி உடை வாங்க முடியாத, போக்குவரத்து கட்டணம் செலுத்த இயலாத அல்லது பள்ளியின் பிற நிதி தேவைகளை நிறைவேற்ற முடியாத காரணத்தால் பள்ளியை விட்டு விலகும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
இது மிகுந்த கவலைக்குரிய விடயமாகும் என்று PHA கருதுகிறது
.
இந்த நிலையில், MADANI அரசு, பள்ளி மாணவர்களுக்காக வழங்கி வரும் பல்வேறு உதவித்திட்டங்களைப் பெற்றோர் கவனித்து, அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என பினாங்கு இந்து இயக்கம் ( PHA ) அறிவுறுத்துகிறது.
இது தொடர்பான கூடுதல்
விவரங்களை, மாணவர்களின் பள்ளிகள் மற்றும் சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்தும் பெற்றுக் கொள்ளலாம்.
அத்தோடு, இந்த “மீண்டும் பள்ளிக்குச் செல்லும் நிகழ்ச்சியை “ வெற்றிகரமாக நடைபெற உதவிய YB. லிம் சியூ கிம், மதிப்பிற்குரிய மேயர் டத்தோ இரா. ராஜேந்திரன் மற்றும் அனைத்து அன்புள்ள நன்கொடையாளர்களுக்கும், பினாங்கு இந்து இயக்கம் தனது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
மேலும், கிடைத்த ஆதரவு மற்றும் நன்கொடைகளின் மூலம், TFA மற்றும் PHA ஆகியவை இலவயக் கண் மற்றும் காது பரிசோதனை, இலவய கண் கண்ணாடி உதவி, இலவய உணவு மற்றும் மளிகைப் பொருள் உதவி போன்ற பல சமூக நலதிட்டங்களை வெர்ற்றிகரமாகச் செயல்படுத்தி வருகின்றன.
தேவைப்படும் வேலைகளில் இடையறாது உதவியும் ஆதரவும் வழங்கி வரும் அனைத்து நன்கொடையாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கும், கிளினிக் தர்ம சிவசந்தா தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது என்று
டத்தோ’ பி. முருகையா (
தலைவர்
பினாங்கு இந்து இயக்கம்) குறிப்பிட்டுள்ளார்

