இந்திய சமுதாயத்தின்
மீது பற்றுள்ளவர்
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்!
பத்துமலை தைப்பூசத்தில்
அமைச்சர் சிவக்குமார் புகழாரம்

இந்திய சமுதாயத்தின் மீது அதிகம் பற்றுள்ளவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் என்று மனித வள அமைச்சர் வ சிவகுமார் இன்று பத்துமலை திருத்தலத்தில் நடைபெற்ற தைப்பூச விழாவில் கலந்து கொண்டபோது தெரிவித்தார்.

இந்திய சமுதாயத்தின் பிரச்சனைகள் குறித்து முதல் அமைச்சரவை கூட்டத்தில் நான் பேசினேன்.

அப்போது குறுக்கிட்ட பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்திய சமுதாயம் எதிர் நோக்கி இருக்கும் பிரச்சனைகள் குறித்து எனக்கு நன்றாக தெரியும் என்றார் அவர்.

சமுதாயம் எதிர்நோக்கி இருக்கும் பிரச்சனைகள் என்ன என்பது அவருக்கு நன்றாக தெரியும் என்று அமைச்சர் சிவக்குமார் சுட்டிக் காட்டினார்.

தமிழ் கடவுள் முருகப்பெருமானுக்கு கொண்டாடப்படும் தைப்பூசத்தை முன்னிட்டு மனித வள அமைச்சர் வ சிவகுமார் இன்று பத்துமலை தைப்பூச திருவிழாவில் கலந்து சிறப்பித்தார்.

ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் ஆர் நடராஜா தலைமையிலான நிர்வாகத்தினர் அவருக்கு மாலை அணிவித்து சிறப்பித்தனர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles