பத்துமலை தைப்பூசத்தில்
சிலாங்கூர் மாநில அரசு
45 கோவில்களுக்கு
6 லட்சத்து ஐம்பதாயிரம் வெள்ளியை வழங்கி சாதனை

தமிழ் கடவுள் முருகப் பெருமானுக்கு மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்ட பத்துமலை தைப்பூச திருவிழாவில் சிலாங்கூர் மாநில அரசு 45 கோவில்களுக்கு 6 லட்சத்து ஐம்பதாயிரம் வெள்ளியை வழங்கி சாதனை படைத்தது.

நேற்றிரவு பத்துமலை திருத்தலத்தில் சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு ஆர்ப்பாட்டக்காரர்கள் வீ.கணபதிராவ் தலைமையில் தைப்பூச கொண்டாட்ட விழா மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் சாரி, செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ், புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர் ராஜீவ், சுக்கை பூலோ நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் வழக்கறிஞர் ஆர் சிவராசா, மலேசிய தமிழர் சங்கத்தின் தேசிய தலைவர் வழக்கறிஞர் எம்.ஜே. கணேசன் உட்பட கவுன்சிலர்கள் கிராமத் தலைவர்கள் பெரும் அளவில் கலந்து சிறப்பித்தனர்.

2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் சிலாங்கூர் மாநில அரசு 18 லட்சம் வெள்ளியை ஒதுக்கி உள்ளது.

இந்நிலையில் இவ்வாண்டு தைப்பூச விழாவில் 45 கோவில்களுக்கு 6 லட்சத்து ஐம்பதாயிரம் வெள்ளி வழங்கப் பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles