Escalator கட்டுவதற்கான
ஏற்பாட்டை தேவஸ்தானம் செய்யும்!
டான்ஸ்ரீ டாக்டர் நடராஜா அறிவிப்பு

பத்துமலை படிக்கட்டுகளை ஏறி முருகப் பெருமானை தரிசிக்க முடியாமல் இருக்கும் பக்தர்கள் வசதிக்காக Escalator கட்டும் பணியை மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானம் செய்யும் என்று அதன் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் ஆர் நடராஜா தெரிவித்தார்.

கேபிள் கார் கட்டும் பணியை கட்டும் திட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இப்போது Escalator கட்டும் பணிக்கு உதவ சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் சாரி முன் வந்திருக்கிறார்.

அரசாங்கத்தின் அனுமதியுடன் இந்த Escalator கண்டிப்பாக கட்டி முடிக்கப்படும்.

மேலும் பத்துமலை திருத்தலத்தில் மிகப்பெரிய மண்டலம் கட்டப்படும்.

மண்டபம் கட்டுவதற்கு முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் 20 லட்சம் வெள்ளியை வழங்கினார்.

முன்னாள் மனித வள அமைச்சர் டத்தோ ஸ்ரீ எம்.சரவணனும் நிதியுதவி பெற்றுத் தந்தார் என்று டான்ஸ்ரீ நடராஜா தெரிவித்தார்.

இதனிடையே தேவஸ்தானத்தின் தலைவர் என்ற முறையில் எனது பணி தொடரும்.

என்னை அழிக்கவும் முடியாது ஒழிக்கவும் முடியாது என்று அவர் சொன்னார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles