ஸ்கூடாய் பாலா சுப்பிரமணியர் தைப்பூச விழாவில் கலந்து சிறப்பித்த ஜொகூர் சுல்தானை வெகுவாக பாராட்டிய நெட்டிசன்கள்

நேற்று கொண்டாடப்பட்ட ஜொகூர் பாரு ஸ்கூடாய் பாலா சுப்பிரமணியர் கோயில் தைப்பூச விழாவில் சுல்தான் ஜொகூர் சுல்தான் இப்ராஹிம் கலந்து சிறப்பித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

ஜொகூர் சுல்தானுடன் ஜொகூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஹாபிஸ் ஓன் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

சுல்தான் ஜொகூர் சுல்தான் இப்ராஹிம் ஆலயத்திற்கு வருகை புரிந்த போது அவருக்கு மலர்கள் தூவி வரவேற்கப்பட்டது.

Daulat tuanku என்ற முழக்கம் பெருமளவில் எதிரொலித்தது.

இதனிடையே தைப்பூச விழாவில் கலந்து கொண்ட ஜொகூர் சுல்தானை நெட்டிசன்கள் பெரிதும் பாராட்டியுள்ளனர்.

மக்கள் மீது பிரிவும் பாசமும் கொண்ட ஜொகூர் சுல்தானின் வருகை இப்போது சமூக வலைத்தளங்களில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles