
லட்சக்கணக்கான பக்தர்கள் புடைசூழ இவ்வாண்டு பினாங்கு தைப்பூசம் மிகவும் பக்தி பரவசத்துடன் நடைபெற்றது பெரும் மகிழ்ச்சி அளிப்பதாக பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி இராமசாமி தெரிவித்தார்.
இரண்டு ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர் இவ்வாண்டு பினாங்கு தைப்பூசத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டது பாராட்டுக்குரியது.
பினாங்கு பால தண்டாயுதபாணி ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் பினாங்கு மாநில முதல்வர் சாவ் கூன் இயோ, கல்வி துணை அமைச்சர் Lim Hui ying, சட்டத்துறை துணை அமைச்சர் ராம் கர்ப்பால் சிங், மூத்த அரசியல்வாதி லிம் கிட் சியாங், பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சதீஷ் முனியாண்டி, டேவிட் மார்ஷல், ஸ்ரீ சங்கர், டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணன் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.

