
தம்போய் ஜோகூர் ஓம் ஸ்ரீ முனீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற தப்பூசத்தை முன்னிட்டு மலேசிய தமிழர் வேலன் படைத் தலைவர் சுரேந்திரன் பலராமன் தலைமையில் தண்ணீர் பந்தல் அமைக்கப் பட்டது.
இந்த தண்ணீர் பந்தல் வெற்றிகரமாக அமைய உதவிய பூலாய் நாடாளுமன்ற சேவை மையம் மற்றும் பெர்லிங் சட்டமன்ற சேவை மையத்தின் உறுப்பினர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று சுரேந்திரன் பலராமன் தெரிவித்தார்.
காணிக்கை நிறைவேற்றிய ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு சுவையான பானங்கள் வழங்கப்பட்டதாக அவர் சொன்னார்.
பக்காத்தான் ஹராப்பான் ஜொகூருடன் இணைந்து மலேசியா தமிழர் வேலன் படை அமைப்பின் இவ்வாண்டு முதல் திட்டம் இதுவாகுமா.
எதிர்காலத்தில் இதுபோன்ற நலத்திட்டங்களை மேற்கொள்வதற்காக பக்காத்தான் ஹராப்பானுடன் இணைந்த கட்சிகளுடன் கைகோர்ப்போம் என்று அவர் சொன்னார்.
மேலும் மலேசியாவில் தைப்பூச விழா சிறப்பாக நடைபெறுவதற்கு உழைத்த கோவில் கமிட்டி மற்றும் மாநில அரசுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்

