


பத்துமலை திருத்தலத்தில் இருந்து நேற்று மாலை புறப்பட்ட வெள்ளி ரதம் அதிகாலை நேரத்தில் தாய்க்கோயில் இன்று வர்ணிக்கப்படும் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தை வந்தடைந்தது.
வெள்ளி ரதம் திரும்பி வந்தபோது வழி நெடுகிலும் பொதுமக்கள் சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.
குயில் ஜெயபக்தி நிறுவனத்தின் உரிமையாளர் டத்தோ டாக்டர் கு.செல்வராஜூ, உமாராணி குடும்பத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் டத்தோ ஏ.கே.இராமலிங்கம், செந்தூல் ஜாலான் மானீஸ் தேவி ஸ்ரீ கருமாரியம்மன் ஆலய ஐயப்பன் பக்தர்கள்,செந்தூல் மாவட்ட காவல் துறையினர் உட்பட பலர் தண்ணீர் பந்தல்களை அமைத்து பக்தர்களுக்கு சுவையான உணவுகளையும் பானங்களையும் வழங்கினார்.
வெள்ளி ரதம் தாய் கோயில் சென்றடையும் வரை போலீஸ்காரர்கள் சிறப்பான முறையில் தங்களது கடமையை நிறைவேற்றினார்.

