

பத்துமலை திருத்தலத்தில் இருந்து வெள்ளி ரதம் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலை நோக்கி வந்தபோது மீரா கட்சியின் தேசிய தலைவர் டத்தோ ஆர். சந்திரகுமணன் 5,000 பக்தர்களுக்கு சுவையான அன்னதானம் வழங்கி உபசரித்தார்.
செந்தூல் மாவட்ட காவல் நிலையத்திற்கு அருகில் மீரா கட்சியின் சார்பில் டத்தோ சந்திரகுமணன் மிகப்பெரிய தண்ணீர் பந்தலை அமைத்திருந்தார்.
வெள்ளி ரத்தத்துடன் நடந்து வந்த பக்தர்களுக்கு சுவையான தோசை, ரொட்டி சானாய், தேநீர்,மைலோ,
நெஸ்காபி வழங்கி அவர் உபசரித்தார்.
மீரா கட்சியின் முக்கிய தலைவர்கள் உட்பட பலரும் இதில் கலந்து கொண்டு பேருதவி புரிந்தனர்.

