மின் படிக்கட்டு திட்டத்திற்கு தனிநபர் பெயரில் விண்ணப்பம்! அனுமதி கிடைக்காமல் இருப்பதற்கு இதுவே முக்கிய காரணம் – பாப்பா ராயுடு

கோலாலம்பூர் ஜன 5-
பத்துமலை திருத்தலத்தில் மின் படிக்கட்டு திட்டத்திற்கு தனிநபர் பெயரில் விண்ணப்பம் செய்துள்ளனர்.

இதற்கு அனுமதி மறுப்பதற்கு இதுவே முக்கிய காரணம் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராயுடு தெரிவித்தார்.

இதற்கு ஏன் என்ற காரணம் ஆலய நிர்வாகத்திற்கு கண்டிப்பாக தெரியும் என்று அவர் சொன்னார்.

கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானம் பத்துமலை மேல்குகைக்கு செல்ல மின் படிக்கட்டு அமைக்க திட்டமிட்டுள்ளது.

ஆனால் இத்திட்டத்திற்கு அனுமதி வழங்கவில்ல என்ற விவகாரம் தற்போது சர்ச்சையாகி உள்ளது.

இந்த சர்ச்சைக்கு முக்கிய காரணமே இத்திட்டத்திற்கான அனுமதி விண்ணப்பம் தனிநபரின் பெயரில் உள்ளதாகும்.

இதனால் இத்திட்டத்திற்கு செலாயாங் நகராண்மைக் கழகம் அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.

ஒரு அமைப்பு அல்லது இயக்கத்தின் பெயரில் அனுமதி கேட்டிருந்தால் உடனடியாக கிடைத்திருக்கும்.

இவ்விவகாரம் ஆலய நிர்வாகத்திற்கும் தெரியும் என்று பாப்பா ராயுடு கூறினார்.

பத்துமலை மலை சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் சொத்து. இதற்கு தனிநபர் பெயரில் எப்படி அனுமதி கொடுக்க முடியும் என்று அவர் கேள்வியை எழுப்பினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles