
பழுதடைந்த வசதிப் பிரச்சினைகளை இன்னும் எதிர்கொள்ளும் தேசிய வகைத் தமிழ்ப்பள்ளிகளுக்கு (SJKT) 50 மில்லியன் ரிங்கிட்டும், தேசிய வகைத் சீனப் பள்ளிகளுக்கு (SJKC) 80 மில்லியன் ரிங்கிட்டும் ஒதுக்கப்படுவதாக பிரதமர் அறிவித்தார்.
“சில தேசிய வகைத் சீனப் பள்ளிகளில் பூமிபுத்ரா மற்றும் இந்திய மாணவர்களும் பயில்கின்றனர். இதற்கு முன்பு 50 மில்லியன் ரிங்கிட் மட்டுமே ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது அது 80 மில்லியன் ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டுள்ளது. தேசிய வகைத் தமிழ்ப்பள்ளிகளைப் பொறுத்தவரை, பள்ளிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், இன்னும் பழுதடைந்த நிலையில் உள்ளன. எனவே, அரசாங்கம் 50 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது,” என்று அவர் விளக்கினார்.
தேசிய அமைப்பிற்கு வெளியே உள்ள பள்ளிகளின் கல்வித் தரம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும், அனைத்து மாணவர்களுக்கும் சமமான கற்றல் வாய்ப்புகள் கிடைப்பதை உறுதி செய்வதற்கும் அரசாங்கத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை அமைந்துள்ளது என்றார் அவர்.

