ஒவ்வொரு குடும்பத்தில் அனைத்து மாணவர்களும் பட்டதாரிகள்! சுரேந்திரன் கந்தா முழக்கம்

கோலாலம்பூர் ஜன 11-
ஒவ்வொரு வீட்டிலும் ஒரு பட்டதாரி என்ற நிலை மாறி இப்போது வீட்டில் உள்ள அனைத்து மாணவர்களும் பட்டதாரிகள் என்று ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் சுரேந்திரன் கந்தா தெரிவித்தார்.

ஸ்ரீமுருகன் கல்வி நிலையம் 44 ஆண்டுகளில் 60,000 பட்டதாரிகளை உருவாக்கி சாதனை படைத்துள்ளது.

ஒரு வீட்டில் ஒரு பட்டதாரி நிலை மாறி அனைவரும் பட்டதாரிகள் என்ற இலக்கோடு ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் தொடர்ந்து வெற்றி நடை போடும் என்று அவர் சொன்னார்.

இந்திய சமுதாயம் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்று இலக்கில் அமரர் டான்ஸ்ரீ தம்பிராஜா அவர்கள் ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தை தோற்று வித்தார்.

அந்த அடிப்படையில் மேலும் ஆயிரக்கணக்கான இந்திய பட்டதாரி மாணவர்களை உருவாக்க நாங்கள் பாடுபடுவோம் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles