தமிழ்ப்பள்ளி மாணவர்களை சென்றடையும் வகையில் ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் பிரம்மாஸ்திரா இணையக் கல்வி!

மா.பவளம்

கோலாலம்பூர் ஜன 11-
நாட்டில் உள்ள 528 தமிழ்ப் பள்ளி மாணவர்களை சென்றடையும் வகையில்
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் ஏற்பாட்டில் பிரம்மாஸ்திரா இணையக் கல்வியை அறிமுகப்படுத்தியதுள்ளது என்று
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் தலைமை இயக்குநர் சுரேன் கந்தா தெரிவித்தார்.

இந்திய மாணவர்கள் கல்வியில் சாதிக்க வேண்டும் என்ற நோக்கில் ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தை டான்ஸ்ரீ தம்பிராஜா உருவாக்கினார்.

ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் இன்று 44ஆண்டு நிறைவை அடைகிறது.

எங்களின் மகாகுரு கல்வி தந்தை டான்ஸ்ரீ தம்பிராஜா மறைந்தாலும் அவர் இன்றும் நம்முடன் உள்ளார்.

டான்ஸ்ரீ தம்பிராஜாவின் ஆசீயோடு 2026 ஸ்ரீ முருகன் கல்வி தவணை இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது.

கந்த வேள்வி என்ற தாரக மந்திரத்துடன் இவ்வாண்டின் கல்வி தவணை தொடங்கியுள்ளது.

கோவிட்-19 காலத்திற்கு முன்பே டான்ஸ்ரீ தம்பிராஜா பிரம்மாஸ்திரா இணையக் கல்வித் தளத்தை உருவாக்கினார்.

இன்று அந்த இணையக் கல்வியை அறிமுகப்படுத்துகிறோம் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles