



கோலாலம்பூர் ஜன 15-
இன்று உலக முழுவதிலும் உள்ள தமிழ் மக்கள் தைப்பொங்கல் தமிழ் புத்தாண்டை மிகவும் விமரிசையாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
தைப்பொங்கல் தமிழர்களின் உன்னத விழாவாக விளங்குகிறது.
அந்த வகையில் மலேசியத் திருநாட்டில் தைப்பொங்கல் விழாவும் உச்சத்தை எட்டியது.
பெட்டாலிங் ஜெயாவில் உள்ள புகழ்பெற்ற லாரஸ் உணவகத்தில் காலையிலேயே தைப்பொங்கல் விழா களைக்கட்டியது.
லாராஸ் உணவகத்தை வெற்றிகரமாக நடத்தி வரும் திருமதி ராஜேஸ்வரி மற்றும் திருமதி லலிதா ஆகியோர் தலைமையில் பொங்கல் பானை வைத்து பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
லாராஸ் உணவகத்தில் பணிபுரியும் தமிழ் நாட்டு இளைஞர்கள் பட்டாசு வெடித்து பொங்கலை கொண்டாடினர்.
மேலும் லாராஸ் உணவகத்தில் அனைவருக்கும் சுவையான உணவும் பரிமாறப்பட்டது.
உண்மையிலேயே இந்த ஆண்டு தைப்பொங்கல் விழா பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்று திருமதி ராஜேஸ்வரி மற்றும் லலிதா தெரிவித்தனர்.

