

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் தமிழ்ப்புத்தாண்டு அன்று நடைபெற்ற பேராக், கோலாகங்சார் மாவாட்டத்தின் நகராண்மைக் கழகக் கூட்டத் தொடரில் அதன் இந்தியர் நகராண்மைக் கழக உறுப்பினர்கள் தமிழர் பாரம்பரிய உடையில் வருகையழித்து, நகராண்மை கழக அதிகாரிகளுக்கு சிற்றுண்டி பரிமாறி, கோலாகங்சார் நில அலுவலக அதிகாரி, மேன்மை தங்கிய நகராண்மைக் கழக ஆளுனர் மற்றும் செயலாளர் ஆகியோருக்கு சிறப்புகள் செய்து மேலும் தைப்பொங்கல் தமிழ்ப்புத்தாண்டு விழாவினைப்பற்றி மிகத்தெளிவாக நகராண்மைக் கழக உறுப்பினரும் ம.தி.க. பேராக் மாநில செயலாருமான கோபி இராமசாமி அவர்கள் எடுத்துரைத்தார்.

