25 ஆண்டுகளுக்கு பிறகு
அம்னோ கட்டடத்தில்
கால் எடுத்து வைக்கிறார்
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்

ஒற்றுமை அரசாங்கத்தின் செயலவை கூட்டம் இன்று இரவு 8.30 மணிக்கு அம்னோ கட்டடத்தில் நடைபெறுகிறது.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக 25 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கட்டடத்தில் கால் எடுத்து வைக்கிறார்.

அம்னோ கட்டடத்திற்கு வரும் இவரின் வருகை மலேசியர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது.

1998 ஆம் ஆண்டு செப்டம்பர் 3 ஆம் தேதி அம்னோ துணை தலைவர் மற்றும் துணை பிரதமர் பதவியில் இருந்து அதிரடியாக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நீக்கப்பட்ட பின்னர் அவர் அம்னோ கட்டடத்தில் கால் எடுத்து வைக்கவில்லை.

சரியாக 25 ஆண்டுகளுக்கு பிறகு இன்றிரவு இவர் இந்த கட்டடத்தில் கால் எடுத்து வைக்கிறார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles