ஊழலை துடைத்தொழிக்கும் பிரதமரின் போராட்டத்திற்கு மனிதவள அமைச்சு துணை நிற்கும்! அமைச்சர் சிவக்குமார் முழக்கம்

நாட்டில் ஊழலை துடைத்தொழிக்க மனிதவள அமைச்சு தீவிரமாகச் செயல்பட்டு வருவதாக மனிதவள அமைச்சர் வ. சிவக்குமார் பகிரங்கமாக அறிவித்தார்.

நாடு முழுவதும் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளை தமது அமைச்சு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

பல்லின மக்கள் வாழும் மலேசிய திருநாடு ஊழலிருந்து விடுபட வேண்டும் எனப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் போராட்டத்திற்கு மனிதவள அமைச்சு ஈக
எப்போதும் துணை நிற்கும் என்று அமைச்சர் சிவக்குமார் முழங்கினார்.

.அரசுத்துறை மட்டுமின்றி தனியார்த் துறையிலும் ஊழல் நடவடிக்கைகள் முறியடிக்க வேண்டும் என உறுதி கொண்டுள்ள பிரதமரை நிலைப்பாட்டைத் தாம் முழுமையாக ஆதரிக்கிறேன் என்று
மனித வள அமைச்சி கீழ் இயக்கும் எச்.ஆர்.டி .கார்ப் அமைப்பின் ஊழல் தடுப்பு நடவடிக்கை பிரச்சாரத்தைத் தொடக்கி வைத்தபோது அவர் இதனை தெரிவித்தார்.

நாட்டில் ஊழல்கள் அதிகரித்து வருவதால் மக்களிடையே ஏற்பட்டு வரும் அச்சத்தை போக்குவது நமது தார்மீக கடமை என்றார்.

இந்நிகழ்ச்சியில் எச்ஆர்டி கார்ப் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ ஷாஹூல் அமிட் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles