

பேராக் மாநிலத்தில் உள்ள ஈப்போ குனோங் ராப்பாட் தமிழ்ப் பள்ளிக்கு கடந்த வாரம் சாவி வழங்கப்பட்டது.
பல லட்சம் வெள்ளியில் கட்டப்பட்ட இந்த தமிழ்ப் பள்ளி ஏழு ஆண்டுகளுக்கு மேலாக திறக்கப்படாமல் இருந்தபோது இந்த பள்ளி திறக்கப்படக் கோரி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தியவர் பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் வ. சிவகுமார் ஆவார்.
பெற்றோர்களை திரட்டி பல முறை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர் சிவகுமார் என்பது நாடு அறியும்.
இன்று மனித வள அமைச்சராக இருக்கும் இவர் இந்த பள்ளி திறக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து குரல் எழுப்பினார் .
இவரின் போராட்டம் வீண் போகவில்லை. கடந்த வாரத்தில் கல்வி அமைச்சின் அதிகாரிகள் குனோங் ராப்பாட் தமிழ்ப் பள்ளிக்கு திடீர் வருகையை மேற்கொண்டு பள்ளி நிர்வாகத்திடம் சாவியை ஒப்படைத்தனர்.

