
சைம் டர்பியின் செம்பனை பொருட்கள் இறக்குமதி தடை அகற்றப்பட்டது ஒரு மகிழ்ச்சியான செய்தி என்று மனித வள அமைச்சர் வ. சிவகுமார் தெரிவித்தார்.
சைம் டர்பி நிறுவனத்திற்கு எதிரான கட்டாய தொழிலாளர்கள் குற்றச்சாட்டு அகற்றப்பட்டுள்ளது.
அந்நிய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் இதர நிறுவனங்கள் இதை பின் பற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
அந்நிய தொழிலாளர்களுக்கு எதிரான அடுக்கு முறையை மனித வள அமைச்சு சகித்துக் கொள்ளாது.
சட்டத்தை மீறும் முதலாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்தார்

