
கோலாலம்பூர் ஜன 18-
சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராயுடு அவர்கள் என் நெருங்கிய நண்பர்.
அவருக்கும் எனக்கும் எந்தவொரு பிரச்சனையும் இல்லை.
நாங்கள் இன்னமும் நல்ல நண்பர்களாக இருக்கிறோம்.
எங்கள் நட்பு இன்னமும் தொடர்கிறது.
படிக்கட்டு திட்டம் விவகாரம் தொடர்பாக எங்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
அது முடிந்து விட்டது.
பாப்பா ராயுடு வுக்கு எதிராக வழக்கு தொடுக்க மாட்டேன்.
சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் என்ற முறையில் உதவிகளை வழங்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
இன்னும் இரண்டு வாரத்தில் தைப்பூசம்.
தைப்பூசத்தை சிறப்பாக நடத்தி முடிப்போம்.
டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ, மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ இரமணன், செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ், கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று அவர் சொன்னார்.
டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ இன்று மதியம் பத்துமலை திருத்தலத்திற்கு சிறப்பு வருகை தந்தார்.
அவருடன் சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராயுடு, பிரகாஷ், சுரேஸ் சிங் ஆகியோரும் வருகை தந்தனர்.
ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் சார்பில் டான்ஸ்ரீ நடராஜா அவர்கள் கோபிந்த் சிங் டியோவுக்கு பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து சிறப்பு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

