ஜொகூர் மாநில பெர்சத்து வேட்பாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்!

ஜொகூர் பாரு, ஜன 19-
வரவிருக்கும் 16ஆவது ஜொகூர் மாநிலத் தேர்தல் மற்றும் தேசிய பொதுத் தேர்தலை எதிர்கொள்வதற்காக பெர்சத்து (BERSATU) கட்சியின் ஜொகூர் மாநில மலாய்காரர் அல்லாத பிரிவு தலைவர் டத்தோ தான் லொ காங் தெரிவித்ததார்.

கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பே வேட்பாளர்களை அடையாளம் காணும் மற்றும் தேர்வு செய்யும் பணிகள் தொடங்கப்பட்டு, முழுமையான தயாரிப்புகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தற்போது தன்னையும் உட்பட மொத்தம் 10 பேர் முன்-வேட்பாளர்களாக உள்ளனர் என்றும், இந்த பட்டியல் ஜொகூர் மாநில பெரிகாத்தான் நேஷனல் இணைக் கூட்டத்தில் விவாதத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மூத்தவர்கள், நடுத்தர வயதினர் மற்றும் இளைஞர்கள் அடங்கிய இந்த முன்-வேட்பாளர் குழுவின் பட்டியல் பின்வருமாறு:

-லாபிஸ் தொகுதி டத்தோ தான் லேக் காங்
-திப்ராவ் தொகுதி பூபாலன் பொன்னுசாமி
-புலாய் தொகுதி யாங் குய் குவாங்
-ஜொகூர் பாரு தொகுதி – லிம் சின் யோங்
-இஸ்கந்தார் புத்தேரி தொகுதி – க்யூ குவாங் யூ
-செம்புலாங் தொகுதி லிம் யியௌ ஜின்
-குளுவாங் தொகுதி ஹுவாங் யுக் யிங்
-கூலாய் தொகுதி சந்திர சேகரன் ஆறுமுகம்
-செகாமாட் தொகுதி தாங் லியாங் ஃபுக்
-பகிரி தொகுதி சென் மிங் லுன்

நேற்று நடைபெற்ற “ஊடக இரவு” (Media Night) நட்புறவு விருந்தில் உரையாற்றும்போது, இந்த முன்-வேட்பாளர் பட்டியலை அவர் அறிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles