பூச்சோங் நாடாளுமன்ற தொகுதியின் தைப்பொங்கல் தமிழர் விழா பரவசத்தில் ஆழ்த்தியது!

செர்டாங் ராயா, ஜன 26-.
தித்திக்கும் தைப்பொங்கல் தமிழர் புத்தாண்டு விழாவை உலகில் உள்ள தமிழ் மக்கள் பெரும் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

மலேசிய திருநாட்டில் இன்னமும் தைப்பொங்கல் தமிழர் திருநாள் விழா ஆங்காங்கே தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் உள்ளது.

அந்த வகையில் பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் இயோ பி இன் மற்றும் ஸ்ரீகெம்பாங்கன் சட்டமன்ற உறுப்பினர் யோங் சியூ கி தலைமையில் நேற்று இரவு செர்டாங் ராயா ஸ்ரீ நவசக்தி துர்க்கை அம்மன் பாண்டி முனி ஆலய வளாகத்தில் மிகப்பெரிய அளவில் தைப்பொங்கல் விழா நடைபெற்றது.

500 க்கும் மேற்பட்ட மக்கள் இந்த விழாவில் கலந்து கொண்ட வேளையில் தமிழர் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் பல விளையாட்டுப் போட்டிகள் பொதுமக்களை பரவசத்தில் ஆழ்த்தியது.

சிலம்ப விளையாட்டு வீரர்களின் சிலம்ப சாகசம் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த விழாவில் பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் இயோ பி இன், ஸ்ரீகெம்ப
பாங்கன் சட்டமன்ற உறுப்பினர் யோங் சியூ கி மற்றும் பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினரின் சிறப்பு அதிகாரிகள் குமார் மற்றும் சூரிய ராஜா ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles