

ஈப்போ, ஜன 26-
மலேசிய இந்தியர் மக்கள் கட்சியின் ( எம். ஐ. பி. பி) தலைவர் யார் என்ற கேள்விக்கே இனி இடம் இல்லை.
அக்கட்சிக்கு நானே சட்டப்பூர்வ தலைவர் ., நானே தளபதி என்று பி. புனிதன் பதில் அளித்தார்
அக்கட்சியின் யார் தலைவன் என்று சமீப காலமாக எழுந்து வந்த பிரச்சனைக்கு தீர்வுக்கானப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 19 ஆம் தேதி சங்கங்களின் பதிவு இலாகாவிடம் (ஆர். ஓ. எஸ்) இருந்து வந்த பதிலில் அக்கட்சிக்கு நானே தலைவன் என்ற பதிலை வழங்கியுள்ளது என்று குறிப்பிட்டார்.
ஈப்போவில் உள்ள அருள் மிகு கருமாரியம்மன் ஆலயத்தில் பேரா எம். ஐ. பி்.பி. கட்சி மகளிர் தலைவி கீதா ராஜூ ஏற்பாட்டில் நடைபெற்ற பொங்கல் நிகழ்வில் கலந்துக் கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.
நாங்கள் வழக்கம்போல் சமுக பணியில் ஈடுபட்டு வருகிறோம், மாநில முழுவதிலும் உள்ள கட்சி பொறுப்பாளர்கள் தங்களது சேவையை தங்கு தடையின்றி தொடர்ந்து செய்து வருகின்றனர்..
கட்சி தலைமைத்துவ போராட்டத்தில் ஒரு தரப்பினர் இறங்கியுள்ளதையும் சுட்டிக்காட்டிப் பேசினார்..
ஆர். ஓ. எஸ். .முடிவினை அறிவித்துவிட்டது தொடர்ந்து கட்சி பொறுப்பாளர்கள் தங்கள் சேவை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர் .
நேற்று மாநில நிலையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் மாநில மகளிர் பிரிவு ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய அதன் மகளிர் தலைவி கீதா ராஜூ , மேலும் சமுகப் பணியை மேற்கொள்ள பல திட்டங்களை வகுத்துள்ளதாக கூறினார்.
இந்த பொங்கல் நிகழ்வில் எம் ஐ. பி். பியின் தேசிய மகளிர் தலைவி லீலாவதி ஜீவரத்தனம் உட்பட்ட மாநில பொறுப்பகாளர்கள் ., தொகுதி பொறுப்பாளர்கள் பலரும் கலந்துக் கொண்டனர்.

