இந்திய முஸ்லிம் சமுதாயத்திற்கு வழிகாட்ட சிறந்த தலைமைத்துவம் அவசியம்! டத்தோஸ்ரீ சரவணன் வேண்டுகோள்

காளிதாஸ் சுப்ரமணியம்

கோலாலம்பூர் ஜன 26-
இந்திய முஸ்லிம் சமுதாயத்துக்கு சிறந்த தலைமைத்துவம் உருவாக வேண்டும் என்று ம இகா தேசிய துணை தலைவர் டத்தோஸ்ரீ எம் சரவணன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்திய முஸ்லிம் சமுதாயத்துக்கு தகுதியானவர்கள் தலைமை தாங்க முன்வராவிட்டால், தகாதவை அனைத்தும் தலைதூக்கும் என்று அவர் எச்சரித்தார்.

கடந்த இரு தினங்களாக முக்மின் – மின்கோய்ன் ஏற்பாட்டில் கோலாலம்பூரில் அனைத்துலக இந்திய முஸ்லிம் வர்த்தக மாநாடு மிகப்பெரிய அளவில் நடைபெற்றது.

17 நாடுகளில் இருந்து 800 பேராளர்கள் கலந்து கொண்ட இந்த மாநாட்டை டத்தோஸ்ரீ எம் சரவணன் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து உரையாற்றினார்.

உலகளாவிய அளவில் வர்த்தக பிரமுகர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது.

அதேசமயம் இந்திய முஸ்லிம் சமுதாயத்துக்கு சிறந்த தலைமைத்துவம் உருவாக வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

டத்தோ வீரா சாகுல் ஹமீது மற்றும் டத்தோ பிவி அப்துல் ஹமிது ஆகியோர் இந்த மாநாட்டை சிறந்த முறையில் ஏற்பாடு செய்ததற்கு டத்தோஸ்ரீ எம் சரவணன் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles