இந்து கோவில்களை காப்பாற்ற மலேசிய இந்து அறப்பணி வாரியத்தை அமையுங்கள்- டத்தோ இராமச்சந்திரன் வலியுறுத்து

காளிதாஸ் சுப்ரமணியம்

கோலாலம்பூர் பிப் 21-
கோவில்கள் எதிர் நோக்கி இருக்கும் பிரச்சனைகள் தீர்க்க மலேசிய இந்து அறப்பணி வாரியத்தை அமைக்க வேண்டும் என்று மலேசிய இந்தியர் நம்பிக்கை அறவாரியத்தின் தலைவர் டத்தோ இராமச்சந்திரன் தெரிவித்தார்.

பினாங்கு மாநிலத்தில் பினாங்கு இந்து அறப்பணி வாரியம் உள்ளது.

பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் கீழ் பினாங்கில் உள்ள கோவில்களுக்கு ஒரு பாதுகாப்பு உள்ளது.

அதேபோல் எல்லா மாநிலங்களிலும் இந்து அறப்பணி வாரியம் அமைக்கப்பட வேண்டும்.

மேலும் தேசிய ரீதியில் மலேசிய இந்து அறப்பணி வாரியம் உடனடியாக அமைக்கப்பட வேண்டும் என்று அவர் சொன்னார்.

மலேசிய இந்து அறப்பணி வாரியம் அமைந்தால் கோவில்கள் எதிர் நோக்கி இருக்கும் பிரச்சனைகளுக்கு படிப்படியாக தீர்வு காண முடியும்.

ஆகவே மலேசிய இந்து அறப்பணி வாரியம் அமைய மடானி அரசாங்கம் உதவி செய்ய வேண்டும் என்று இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles