

ஷா ஆலம், பிப் 25-
கோத்தா கெமுனிங் சட்டமன்ற தொகுதி யில் கோவில் பிரதிநிதிகளுடன் ஒரு முக்கிய சந்திப்பு கூட்டம் நேற்று கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது.
நான் சட்டமன்ற உறுப்பினராக (ADUN) இருப்பதன் அடிப்படையில், கோவில் நிர்வாகங்களுடனும் அப்பகுதியிலுள்ள கோவில் பிரதிநிதிகளுடனும் அறிமுகம் மற்றும் கலந்துரையாடலுக்கான ஒரு முக்கிய தளமாக அமைந்தது என்று அவர் சொன்னார்.
இந்த சந்திப்பில் நிலம், கோவில் மேம்பாட்டு தேவைகள், நலத்திட்டங்கள் மற்றும் தொடர்புடைய பிரச்சினைகள் உள்ளிட்ட பல அம்சங்கள் விவாதிக்கப்பட்டன.
Malaysia Hindu Sangam (MHS) மாநிலச் செயலாளர் மற்றும் Malaysia Hindu Sangam Cawangan Shah Alam பிரதிநிதிகளும் கலந்து கொண்டு தங்களது செயல் திட்டங்களை பகிர்ந்து கொண்டனர்.
கோவில் நிர்வாகங்களும் தங்களது கருத்துகள் மற்றும் தேவைகளை முன்வைத்தனர்.
திறந்த மற்றும் அமைதியான சூழலில் நடைபெற்ற இந்த கலந்துரையாடல், அனைவரிடையேயும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என நம்புகிறோம் என்று அவர் சொன்னார்.

