பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் சிறப்பான சாதனைகள்!

கோலாலம்பூர் பிப் 25-
பினாங்கு இந்து அறவாரியத்திற்கு, 2024 ஆம் ஆண்டிற்கான கணக்காய்வு அறிக்கையில் தலைமை கணக்காய்வாளர் வழங்கிய எங்கள் நிர்வாக அணுகுமுறைக்கு வழங்கப்பட்ட முழுமையான பாராட்டு சான்றிதழை எந்தவித திருத்தங்களும் இன்றி பெற்றுள்ள சிறப்பான சாதனைக்காக என் மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் துணைத் தலைவர் மற்றும் செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன் தெரிவித்தார்.

இந்த சாதனை, அறவாரியத்தின் நிர்வாக அணுகுமுறை முழுமையான பொறுப்புணர்வு, நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட்டு வருவதற்கான தெளிவான சான்றாகும்.

மேலும், தன்னார்வத்துடன், அர்ப்பணிப்புடன் மற்றும் ஒருமித்தமாக பணியாற்றிய ஒவ்வொரு ஆணையர் குழு உறுப்பினருக்கும் சிறப்பு பாராட்டுக்கள் உரித்தாகின்றன.

அவர்களின் விழிப்புணர்வும் துல்லியமான செயல்முறைகளும் இச்சாதனையை வெற்றிகரமாக எட்ட உதவியுள்ளன.

இந்த சிறப்பான சாதனை, பினாங்கு இந்து அறவாரியத்தின் நிர்வாகத்தில் உயர்ந்த தரநிலைகளை தொடர்ந்து பேணுவதற்கும், பொதுமக்கள் மத்தியில் அறவாரியத்தின் மீது உள்ள நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துவதற்கும் ஊக்கமும் உந்துதலும் அளிக்கட்டும் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles