வளர்ச்சி குன்றிய குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாட்டுப் பிரச்சனையை நீக்க பால் பொருட்களுக்கான மானிய உதவி

வளர்ச்சி குன்றிய குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாட்டுப் பிரச்சினையைக் குறைக்க உதவும் வகையில், பால் பொருட்களுக்கான மானியத்தை அறிமுகப்படுத்த வேண்டும் அல்லது மறுசீரமைக்க வேண்டும் என்று பெண்கள், குழந்தைகள் மற்றும் சமூக மேம்பாட்டுக்கான நாடாளுமன்ற சிறப்புத் தேர்வுக் குழு பரிந்துரைத்துள்ளது.

குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு பால் ஒரு சிறந்த மற்றும் எளிதான ஊட்டச்சத்து ஆதாரமாக இருந்தாலும், ஆண்டுதோறும் பெரிய மானியங்களைப் பெறும் சமையல் எண்ணெய் மற்றும் சர்க்கரையுடன் ஒப்பிடுகையில், அதன் விநியோகம் மற்றும் விலைக்கு உரிய கவனம் செலுத்தப்படவில்லை என்று அதன் தலைவர் இயோ பீ யின் (பிஎச்-பூச்சோங்) கூறினார்.

நிதி அமைச்சு, விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சு, உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சு (KKM) ஆகியவை பாலுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் வகையில் மானியங்களை மறுசீரமைக்க வேண்டும் என்று குழு கருதுவதாக அவர் குறிப்பிட்டார்.

“வளர்ச்சி குன்றிய நிலை என்பது உடல் உயரம் சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சினை மட்டுமல்ல, அது குழந்தைகளின் மூளை அமைப்பு மற்றும் செயல்பாட்டிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.”

“வளர்ச்சி குன்றிய குழந்தைகளின் மூளையின் அளவு சிறியதாகவும், குறைவான நியூரான்களையும், நரம்பு செல்களுக்கு இடையே குறைவான இணைப்புகளையும் கொண்டுள்ளது. இது அவர்களின் IQ நிலை, மொழித் திறன் மற்றும் கவனம் செலுத்தும் திறன் போன்ற அறிவாற்றல் செயல்பாடுகளைப் பாதிக்கிறது,” என்று அவர் இன்று மக்களவையில் குழந்தைகள் வளர்ச்சி குன்றிய பிரச்சினை தொடர்பான குழுவின் அறிக்கையைத் தாக்கல் செய்தபோது கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles