மறுசீரமைக்கப் பட்ட சுபாங் தோட்டம் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் மண்டபம் அதிகாரப்பூர்வமாக திறப்பு விழா கண்டது!

கோலாலம்பூர் மார்ச் 1-
இந்தியர்கள் அதிகம் வாழ்ந்த தோட்டங்களில் ஒன்றாக சுபாங் தோட்டம் விளங்கியது.

சுபாங் தோட்டம் முற்றிலும் மேம்பாட்டு திட்டங்களில் சூழ்ந்தாலும் அங்கு கட்டப்பட்ட அம்மன் ஆலயம் இன்னமும் கம்பீரமாக காட்சி அளிக்கிறது.

130 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அம்மன் ஆலயத்தில் கட்டப்பட்ட மண்டபம் இப்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இளம் தொழில் முனைவோர் கணேசன் அவர்களின் முயற்சியால் மண்டபம் முழுமையாக சீரமைப்பு செய்யப்பட்டு அழகாக காட்சி அளிக்கிறது.

தொழில் முனைவோர் கணேசன் மற்றும் டத்தோ மலர்விழி குணசீலன் ஆகியோர் தலைமையில் இன்று மண்டப திறப்பு விழா விமரிசையாக நடைபெற்றது.

இந்த மண்டபத்தில் இந்திய குறிப்பாக படிவம் 4,5 மாணவர்கள் இலவசமாக டியூஷன் பயில வாய்ப்பு வழங்கப்படுவதாக சுபாங் தோட்டம் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தலைவர் விஜயின் தெரிவித்தார்.

இதனிடையே இந்த கோவில் மண்டபத்தை நல்ல முறையில் பயன்படுத்தி கொண்டு கல்வி பயிலும்படி மாணவர்களை கணேசன் கேட்டுக் கொண்டார்.

மேலும் இங்குள்ள மக்கள் கோவில்களுக்கு வந்து இறைவனை வழிபடும் படி அவர் கேட்டுக் கொண்டார்.

இன்றைய விழாவில் ஏராளமான பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்ட வேளையில் எஸ்பி எம் தேர்தலில் சிறப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வெகுமதி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles