RON95 மானிய விலையை தக்க வைத்துக் கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்படும் – பிரதமர்

கோலாலம்பூர், மார்ச் 3 – பூடி மடாணி RON95 மானியத் திட்டத்தின் கீழ், பெட்ரோல் விலையை லிட்டருக்கு RM1.99 என நிலையாக வைத்திருக்க அரசாங்கம் முயற்சிகளை மேற்கொள்ளும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார். இருப்பினும், அதற்கு தம்மால் உத்தரவாதம் அளிக்க முடியாது என்றார் அவர்.

உலக எண்ணெய் விலை உயர்வு மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் பதற்ற நிலை போன்ற காரணங்கள், இது அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டவை என்பதை அவர் தெரிவித்தார்.

உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் ஏற்படும் மாற்றங்கள், மலேசியாவில் பெட்ரோல் விலையை பாதிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் விளக்கினார்.

இதற்கிடையில், மக்களின் நலனைப் பாதுகாக்க அரசு தொடர்ந்து தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் பிரதமர் உறுதியளித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles