
கோலாலம்பூர் மார்ச் 4-
இஸ்லாமியர்களின் புனித நூலான அல்குர்ஆனை காலால் மிதித்த பல்கலைக்கழக மாணவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டப்பட்டது. இது பெரிதும் வரவேற்கக் கூடியது. அதற்காக பாராட்டுக்கள்.
ஆனால் இந்து சமயத்தையும் இந்துக்களையும் தொடர்ந்து இழிவுபடுத்தி வருபவர்கள் மீது ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன் கேள்வி எழுப்பினார்.
சர்ச்சைக்குரிய சமய சொற்பொழிவாளர் வினோத் சம்ரி, செகு சந்திரா, பிர்டாவூஸ் ஆகியோர் மீது ஆயிரக்கணக்கில் போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளன.
ஆனால் இதுவரை அவர்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன் மேலவையில் சுட்டி கட்டினார்.
இவரின் கேள்விக்கு பதில் அளித்த ஒற்றுமை துறை துணை அமைச்சர் யூனிஸ்வரன் எந்த ஒரு பாகுபாடு இன்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

