இந்து ஆலயங்களுக்கு எதிராக விஷம பிரச்சாரங்கள் செய்யும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள் – ரீஜன் குமார்

கோம்பாக்: மார்ச் 5-
இந்து ஆலயங்களுக்கு எதிராக விஷம பிரச்சாரங்கள் நபர்கள் மீது போலிஸ் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று
பெர்சத்து கட்சியின் செலாயாங் பெர்செகுது தலைவர் ரீஜன் குமார் ரத்னம் கேட்டுக் கொண்டார்.

ஜம்ரி வினோத் என்பவர் தொடர்ச்சியாக மற்ற இன மக்களை பாதிக்கும் வகையில் பேசி வருகிறார்.

குறிப்பாக ஆலய விவகாரத்தில் அவரின் செயல் மிகவும் கண்டனத்துக்குரியது.

ஆலயங்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு அவர் மக்களை தூண்டுகிறார்.

இதன் அடிப்படையில் தான் கோம்பாக் மாவட்ட போலிஸ் தலைமையகத்தில் அவருக்கு எதிராக போலிஸ் புகார் செய்யப்பட்டது.

இதே போன்று நாடு முழுவதும் போலிஸ் புகார் செய்யப்பட்டு வருகின்றன.

இதுபோன்ற நபர்கள் தான் நாட்டின் அமைதிக்கு எதிரானவர்கள். மக்களை திசை திருப்புகின்றனர்.

ஆக போலிஸ் அவர் மீது உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

மேலும் பினாங்கு மாநிலத்தில் நடத்தப்படவிருக்கும் ஆலயத்திற்கு எதிரான கூட்டத்தையும் போலிஸ் தடுத்து நிறுத்த வேண்டும்.

இதுவே எங்களது கோரிக்கை என்று ரீஜன் குமார் செய்தியாளர்களிடம் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles