புக்கிட் மெர்தாஜம் ஐயா கோவில் திருவிழா மிகவும் விமரிசையாக நடைபெற்றது!

பினாங்கு மார்ச் 7-
பினாங்கு மாநிலத்தில் புக்கிட் மெர்தாஜம் மருத்துவமனை வளாகத்தில் அருள் பாலிக்கும் ஜயா கோவில் வருடாந்திர திருவிழா இன்று மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

இந்த கோவிலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த சில தரப்பினர் திட்டமிட்ட வேளையில் அதற்கு கடுமையான எதிர்ப்புகள் எழுந்தன.

இறுதியில் ஆர்ப்பாட்டம் நடத்த மாட்டோம் என்று அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில் இன்று சனிக்கிழமை ஜயா கோவில் வருடாந்திர திருவிழாவில் நாடு தழுவிய அளவில் மக்கள் கலந்து கொண்டு ஆதரவு வழங்கினர்.

பினாங்கு மாநில முன்னாள் துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் இராமசாமி, மலேசிய இந்தியர் நம்பிக்கை அறவாரியத்தின் தலைவர் டத்தோ இராமச்சந்திரன் உட்பட பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles