இந்திய சமுதாய பெண்களின் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் மஇகா உறுதுணையாக இருந்து வருகிறது: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் பெருமிதம்

கோலாலம்பூர்: மார்ச் 8-
மலேசியப் பெண்கள் அனைவருக்கும் மஇகா சார்பில் உலக மகளிர் தின வாழ்த்தைத் தெரிவித்துக் கொள்வதாக அதன் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் ச.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இன்று மார்ச் 8-ஆம் நாள் உலகம் முழுவதும் உலக மகளிர் தினம் கொண்டாடப்படும் வேளையில், இந்திய சமுதாய பெண்களின் முன்னேற்றத்தையும் அவர்களின் வளர்ச்சிக்கு மஇகா எந்த அளவிற்கு உறுதுணையாக இருந்து வருகிறது என்பதையும் நினைத்துப் பார்க்கிறேன்.

அரசியல், வர்த்தகம், ஆன்மிகம், தொண்டு உள்ளிட்ட தலங்களில் மட்டுமல்ல; நம் ஸ்மௌதாயத்தின் கல்வி மறுமலர்ச்சிக்காக நம் பெண்கள் ஆற்றிவரும் காலம்கருதாப் பணியையும் இவ்வேளையில் எண்ணிப் பார்க்கிறேன்.

குறிப்பாக மலேசியத் தமிழ் பள்ளிகளில் பெரும்பாலான கல்வி பொறுப்புகளை பெண் ஆசிரியர்களே ஏற்றுக் கொள்கின்றனர்.

அவர்கள், மாணவர்களுக்கு கல்வியை மட்டுமல்ல; மாணவர்களின் கலாச்சார அடையாளத்தையும் பாதுகாக்கும் முக்கிய பங்காற்றுகின்றனர்.

பள்ளி நிர்வாகக் குழுக்கள், பெற்றோர்-ஆசிரியர் சங்கங்கள், மற்றும் சமூக நிகழ்வுகளில் பெண்கள் முன்னிலை வகிக்கின்றனர்.

அவர்களின் தாராள பங்களிப்பு, பள்ளிகளின் வளர்ச்சிக்கு அடித்தளமாகிறது என்று அவர் சொன்னார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles