
சென்னை மே 6-
கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக திமுகவுடன் கூட்டணி வைத்த காங்கிரஸ் கட்சி இன்று அந்த உறவை முறித்துக் கொண்டது.
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்ற காங்கிரஸ் 5 இடங்களில் வெற்றி பெற்றது.
தற்போது ஆட்சி அமைக்க ஆதரவு தரும்படி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கேட்டுக் கொண்டதை அடுத்து காங்கிரஸ் நிபந்தனையுடன் ஆதரவு தர முன் வந்துள்ளது.
மேலும் வரும் 2029 ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் ஊராட்சி மன்ற தேர்தலில் தவெக கட்சியுடன் கூட்டணி தொடரும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது.

