
கோலாலம்பூர் மே 7-
மிகவும் பரபரப்பான சூழலில் நடைபெற்ற பிரிக்பீல்ட்ஸ் ரூக்குன் தெத்தாங்கா தலைவர் பதவி தேர்தலில் ஸ்டார் மணியம் அமோக வெற்றி பெற்றுள்ளார்.
லெம்பா பத்தாய் கெஅடிலான் அரசியல் வட்டாரத்தில் மிகவும் பிரபலமான ஸ்டார் மணியம் மீண்டும் பிரிக்பீல்ட்ஸ் ரூக்குன் தெத்தாங்கா தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் நடைபெற்ற தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஸ்டார் மணியத்திற்கு 65 வாக்குகள் கிடைத்தன.
எதிரத்து போட்டியிட்ட ராஜேந்திரன் 35 வாக்குகள் பெற்று தோல்வி கண்டார்.
இறுதியில் 32 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தனது தலைவர் பதவியை ஸ்டார் மணியம் தற்காத்துக் கொண்டார்.

உதவித் தலைவர் தேர்தலில் பூபாலன் 62 வாக்குகள், செயலாளர் பதவி தேர்தலில் கெங்கம்மா 62 வாக்குகள், துணை செயலாளர் பதவி தேர்தலில் ஜீவிதா 57 வாக்குகள் மற்றும் பொருளாளர் பதவி தேர்தலில் கனகேஸ்வரி 59 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றனர்.
இந்த தேர்தலில் தம்மை மீண்டும் அமோக வெற்றி பெற செய்த ரூக்குன் தெத்தாங்கா உறுப்பினர்களுக்கு ஸ்டார் மணியம் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

