
சென்னை: மே 7-
தவெக ஆட்சியமைக்க திமுக இடையூறு செய்யாது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார்.
6 மாதங்களுக்கு ஆட்சியை தொந்தரவு செய்ய மாட்டோம். திமுக அரசின் திட்டங்களை தொடர வேண்டுமென எதிர்பார்க்கிறேன்.
மகளிருக்கு மாதம் ரூ.2,500 அளிப்பது கடினம். திமுக அரசு வழங்கியது போன்று மாதம் ரூ.1,000ஆவது வழங்க வேண்டும்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆட்சியை ஆறு மாதங்களுக்கு எவ்வித இடையூறும் தராமல் தொடர்ந்து கவனிப்போம் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

