
கோலாலம்பூர் மார்ச் 9-
நாட்டில் இனங்கள் இடையே பிளவை ஏற்படுத்தி வரும் ஷம்ரி வினோத் உட்பட ஐவர் மீது காவல் துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மலேசிய அனைத்துலக மனிதநேய சமூக நல அறவாரியத்தின் தலைவர் டத்தோ இராமச்சந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களை நாங்கள் பெரிதும் மதிக்கிறோம்.
அதேசமயம் நாட்டில் இனங்கள் இடையே அச்சத்தையும் கலவரத்தையும் தூண்டும் வகையில் ஷம்ரி வினோத் உட்பட ஐவர் தொடர்ந்து பேசி கொண்டு வருகிறார்கள்.
இவர்கள் மீது ஏராளமான புகார்கள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாட்டின் கோட்பாடுகளை அனைவரும் மதிக்க வேண்டும்.
மற்ற மதங்களையும் மதிக்க வேண்டும்.
ஆனால் இந்த வினோத் காளிமுத்துவின் அட்டகாசம் எல்லையை தாண்டி விட்டது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
கோவில் விவகாரத்தை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். அதில் தலையிட நீ யார் என்று அவர் கேள்வியை எழுப்பினார்.
மதக் கலவரத்தை தூண்டும் வகையில் ஷம்ரி வினோத் உட்பட ஐவர் தொடர்ந்து பேசி வருகின்றனர்.
இதற்கு காவல் துறை முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

