
ஷா ஆலம், மார்ச் 14-
சிலாங்கூர் மாநிலத்திலுள்ள தமிழ்ப்பள்ளி மாணவர்கள் இடையே நடத்தப்பட்ட மாபெரும் சதுரங்கப் போட்டியில் 548 மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.
சிலாங்கூர் மாநில தொடர்புக் குழு, சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்றம், எம்ஜஇடி, ஏம்ஸ்ட் ஆகிய இணைந்து இந்த சதுரங்கப் போட்டியை மிகப்பெரிய அளவில் ஏற்பாடு செய்தது.

மாணவர்களின் திறன்களை வெளிப்படுத்தும் சிறப்பான விளையாட்டு இதுவாகும் என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
நம் மாணவர்கள் இந்த விளையாட்டில் அதிகம் ஆர்வம் கொண்டுள்ளது இந்த போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களின் எண்ணிக்கை வெளிப்படுத்துகிறது.
நம் சிந்தனை மட்டுமல்லாமல் எதிரியின் சிந்தனையையும் தெரிந்து கொள்ளும் ஆட்டம் இதுவாகும் என மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
இந்த போட்டி நிகழ்ச்சியில் மஇகாவின் தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன், உதவித் தலைவர் டத்தோ முருகையா, சிலாங்கூர் மாநில தலைவர் டத்தோ ஐயங்கர், டத்தோ புத்ரி சிவம் உட்பட மஇகாவினரும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

