
பீடோர், மார்ச்13-
ஒரு சமூகத்தின் வளர்ச்சியும் மேம்பாடும் மட்டுமின்றி அச்சமூகத்தின் உருமாற்றமே கல்வியின் அடித்தளத்திலிருந்தே மேம்பாடு காணுவதாக கூறிய மாநில மனிதவளம்,சுகாதாரம்,தேசிய ஒருமைப்பாடு மற்றும் இந்தியர் நல்வாழ்வுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு டத்தோ அ.சிவநேசன் பிள்ளைகளின் கல்வியில் பெற்றோர்களின் கண்காணிப்பு மிகமிக அவசியமென்றும் அவர் நினைவுறுத்தினார்.
பள்ளியில் ஆசிரியர்கள் சிறந்த கற்றல் கற்பித்தலை மேற்கொண்டாலும் ஒவ்வொரு பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியிலும் அதுசார்ந்த நடவடிக்கைகளிலும் பெற்றோர்களின் ஆக்கப்பூர்வ செயல்பாடு இன்றியமையாதது என்றும் குறிப்பிட்டார்.
அதே வேளையில்,கல்வியில் பின் தங்கிய மாணவர்கள் தங்களின் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்ள தொழிற் திறன் கல்வியில் தங்களின் கல்வி பயணத்தை ஆக்கப்பூர்வமானதாக அமைத்து கொள்ள வேண்டும்.அதற்கு பெற்றோர்கள் அம்மாணவர்களுக்கு வழிகாட்ட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மேலும், பேரா மாநிலத் தொழிற் திறன் மேம்பாட்டுக்கு தலைமையேற்றிருக்கும் தாம் அது சார்ந்த விளக்கம் அளிக்கவும் தொழிற் திறன் பயிற்சி சார்ந்த நடவடிக்கைளுக்கும் சுங்கையில் பயிற்சி மையத்தையும் அமைத்திருப்பதாகவும் கூறிய அவர் வாய்ப்புகளை நன் முறையில் பயன்படுத்தி மாணவர்கள் சிறந்த எதிர்காலத்தை உருவாக்க அரசாங்கம் தயாராக உள்ளது,அவ்வாய்ப்பை தம் பிள்ளைகள்ப் பயன்படுத்தி கொள்வதை ஒவ்வொரு பெற்றோரும் உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டு கொண்டார்.

அதுமட்டுமின்றி,தொழிற் திறன் கல்வியின் செயல்பாடுகளுக்காகவும் அ
சுங்கை சட்டமன்றத்திலுள்ள பள்ளி மாணவர்களுக்கும் ஏழ்மை நிலை மாணவர்களுக்கும் நோன்பு பெருநாள் உடைகளையுன் நோன்பு பெருநாள் அன்பளிப்பு நிதியும் வழங்கும் நிகழ்வில் டத்தோ சிவநேசன் மேற்கண்டவாறு கூறினார்.
அதுமட்டுமின்றி,ஏழ்மை உட்பட வேறு எந்தவொரு காரணத்தாலும் சுங்கை சட்டமன்ற தொகுதியில் எந்த குடும்பமோ அல்லது எந்தவொரு மாணவரோ பெருநாளைக் கொண்டாடமல் இருக்கும் சூழல் எப்பவுமே உருவாகக் கூடாது.பெருநாள் என்பது அனைவருக்குமான மகிழ்ச்சியான நன்னாள்.எனவே,அனைவரும் நோன்பு பெருநாளை மகிழ்ச்சியாய் கொண்டாடி மகிழவே இந்த அன்பளிப்புகள் வழங்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.
இம்மாணவர்களை அந்தந்த பள்ளி நிர்வாகமே தேர்வு செய்ததாகவும் சுமார் 9 பள்ளிகளைச் சார்ந்த 150 மாணவர்களுக்கு அன்பளிப்பு வழங்கப்பட்டதாகவும் கூறிய டத்தோ சிவநேசன் விடுப்பட்டவர்கள் அல்லது உதவு தேவைப்படுவோர் விரைந்து தனது சேவை மையத்தை அணுகுமாறும் கேட்டு கொண்டார்.
நாட்டில் தற்போது தேசிய ஒற்றுமைக்கும் மத நல்லிணக்கத்திற்கும் கேடு விளைவிக்கும் நோக்கில் சில பொறுப்பற்ற நபர்கள் அநாகரிகமாக நடந்து கொண்டாலும் மலேசியர்களின் ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் ஒருபோதும் யாராலும் மாசுப்படுத்திட முடியாது என்றும் எச்சரித்தார்.
பேரா மாநிலத்தை பொருத்தமட்டில் தேசிய ஒருமைப்பட்டுக்கு எந்தவொரு சிக்கலும் இல்லை.இங்கு மக்கள் அனைவரும் ஒற்றுமையாகவும் புரிந்துணர்வோடும் மலேசியர்கள் என்னும் உயரிய சிந்தனையோடும் வாழ்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.
மிகவும் சிறப்பாக நடைபெற்ற நோன்பு பெருநாள் அன்பளிப்பு நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அதிகாரி,துணை அதிகாரி,ஆசிரியர்கள் ஆகியோருடன் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள்,கிராமத்து தலைவர்களோடு பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

