
பினாங்கு மார்ச் 18-
பினாங்கு லீக் முஸ்லிம்மின்
36ஆம் வருடமாக பெருநாள் உதவி வழங்கும் நிகழ்ச்சி டேவான் ஸ்ரீ பினாங்கு மண்டபத்தில் அதன் தலைவர் டத்தோஸ்ரீ ஹாஜிகாஜா நஜ்முதீன் தலைமையில் நடைபெற்றது.
பினாங்கு ஆளுநர் துன் டத்தோ உத்தாமா ஹாஜி ரம்லி பின் ஙா தாலிப், டத்தோ டாக்டர் முஹம்மது அப்துல் ஹமீது துணைத் முதல்வர், முஸ்லிம் லீக் துணைத் தலைவர் ஏற்பாட்டுகுழு தலைவர் டத்தோ டாக்டர் சாகுல் அமீது ஆகியோர் உரையாற்றினார்.

டத்தோ முஹம்மது மீரா முஸ்லிம் லீக் உதவித் தலைவர், டத்தோ மேஜர் லத்தீப் முஸ்லிம் லீக் உதவித் தலைவர், டத்தோ அப்துல் காதர் முஸ்லிம் லீக் உதவித் தலைவர் முஸ்லீம் லீக் செயலாளர் மாட்நூர், டத்தோ டாக்டர் அமிர்ஷா, டத்தோ ஸ்ரீ யூசுப் தய்யிப் சங்க தலைவர்கள் லீகா இளைரணி தலைவர் ஜமில் காதிர்கனி, லீகா உறுப்பினர்கள் மகளிரணி உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
லேப்டாப் கணிணி 10 ,வீல்சேர் 20 வழங்கப்பட்டது. ஏழை எளிய மக்களுக்கு சுமார் 900 நபர்களுக்கு பெருநாள் உதவி வழங்கப்பட்டது. உஸ்தாத் அஸ்லான் துஆ ஓதினார்.

