டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் தலைமையிலான மஇகா இந்திய முஸ்லிம் சமுகத்திற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது! டத்தோஶ்ரீ சரவணன் புகழாரம்

மா.பவளச்செல்வன்

கோலாலம்பூர் மார்ச் 18-
டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தலைமையிலான மஇகா இந்திய முஸ்லிம் சமூகத்திற்கு முழு அங்கீகாரத்தை வழங்கியுள்ளது என்று
மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் புகழாரம் சூட்டினார்.

மஇகா தேசியத் தலைவருடனான நோன்புத் திறக்கும் விழா நேற்று மஇகா தலைமையகத்தில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

இந்திய முஸ்லிம் சமுகத்தினர் திரளாக இவ்விழாவில் கலந்து கொண்டது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்று அவர் சொன்னார்.

அதே வேளையில் இந்த மஇகா கட்டடம் உட்பட கட்சியின் மேம்பாட்டில் இந்திய முஸ்லிம் சமுகத்தின் பங்களிப்பு அளப்பரியதாக உள்ளது.

இதன் அடிப்படையில்தான் கட்சியில் இந்திய முஸ்லிம் சமுதாயத்திற்கு கட்சிகள் உரிய அங்கீகாரம் வழங்கப்பட்டது.

டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தலைமையில் அச் சமுதாய மக்களுக்கு அதிக முன்னுரிமை வழங்கப்படுகிறது.

டான்ஸ்ரீ ஹனிபா மேலவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது.

டத்தோ வீரா ஷாகுல் தாவூத் எச்ஆர்டி கோர்ப் தலைமை இயக்குநராக பணியாற்றினார்.

டத்தோ இப்ராஹிம் ஷா டேஃப் கல்லூரியின் நிர்வாகியாக பதவி வகிக்கிறார்.

குறிப்பாக எம்ஐஇடி தலைமை இயக்குநராக மும்தாஜ் தொடர்ந்து பதவியில் நீடிக்கிறார்.

இப்படி கட்சியில் இந்திய முஸ்லிம் சமுதாயத்திற்கு உரிய அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

வரும் காலங்களில் மலேசியா வாழ் இந்திய முஸ்லிம் ஆதரவும் ஒத்துழைப்பும் இந்த கட்சிக்கு தொடர்ந்து கிடைக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles