
கோலாலம்பூர் மார்ச் 22-
மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று பத்துகேவ்ஸ் ஷாங்கா மண்டபத்தில் மிகப்பெரிய அளவில் நடைபெற்றது.
இந்த விழாவில் 15 மூத்த பத்திரிகையாளர்கள் மற்றும் மூத்த பணியாளர்களுக்கு பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது.
ம இகா தேசிய துணை தலைவர் டத்தோஸ்ரீ எம் சரவணன் தலைமையில் இந்த சிறப்பு வைபவம் இடம் பெற்றது.
அந்த வகையில் இந்த விழாவில் மக்கள் ஓசை புகைப்பட கலைஞர் பி.மலையாண்டி, தமிழ் ஓசை ஆசிரியர் கு.தேவேந்திரன், ஆர்டிஎம் செய்தியாளர் பிரேம் ஆனந்த், ஹேமாந்த குமார், புகைப்பட கலைஞர் மூர்த்தி ஆகியோருக்கும் சிறப்பு செய்யப்பட்டது.
மலேசிய நண்பன் மூத்த செய்தியாளர் ஜீவா, சிரம்பான் நிருபர் துர்க்கா, திருமதி அமுதா, மக்கள் ஓசை சார்பில் யோகேஸ்வரன், மக்கள் ஓசை இணைய தள ஆசிரியர் திருமதி தோ.அ. புவனேஸ்வரி, திருமதி சாந்தி ஆகியோருக்கும் சிறப்பு செய்யப்பட்டது.
தமிழ் நேசன் சார்பில் மூத்த நிருபர் ரவி முனியாண்டி, திருமதி ராகினி, திருமதி தனவதி, ஆனந்தன் ஆகியோருக்கும் சிறப்பு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

