பத்திரிகை ஆசிரியர்களை பாராட்டி சிறப்பு செய்தார் பாப்பா ராயுடு – சுரேந்திரன்

காளிதாஸ் சுப்ரமணியம்

கோலாலம்பூர் மார்ச் 22-
மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் ஏழாம் ஆண்டு குடும்ப தின விழா நேற்று பத்துகேவ்ஸ் ஷாங்கா மண்டபத்தில் மிகப்பெரிய அளவில் நடைபெற்றது.

ம இகா தேசிய துணை தலைவர் டத்தோஸ்ரீ எம் சரவணன் இந்த விழாவை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்த வேளையில்
சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராயுடு மற்றும் ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் தலைமை இயக்குனர் சுரேந்திரன் கந்தா ஆகியோர் சிறப்பு பிரமுகர்களாக கலந்து சிறப்பித்தனர்.

இந்த விழாவில் முதல் அங்கமாக தமிழ்ப் பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் இணையத் தள ஆசிரியர்களுக்கும் சிறப்பு செய்யப்பட்டது.

அந்த வகையில் மலேசிய நண்பன் ஆசிரியர்கள் டத்தோ எம் இராஜன், திருமதி ராஜேஸ்வரி கணேசன், செ.வே.
மலைச்செல்வன் ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது.

அதேபோல் மக்கள் ஓசை ஆசிரியர்கள் பி.ஆர்.இராஜன், எம்.எஸ்.மலையாண்டி, தமிழ் மலர் ஆசிரியர் கு.தேவேந்திரன், தேசம் ஆசிரியர் குணாளன் மணியம், அனேகன் ஆசிரியர் தயாளன் சண்முகம், நம்பிக்கை ஆசிரியர் பார்த்தீபன், தினத்தந்தி ஆசிரியர் காளிதாஸ் சுப்ரமணியம், குமாரி ஆசிரியர் நக்கீரன், தென்றல் ஆசிரியர் வித்யாசாகர், தமிழ் நேசன் ஆசிரியர் சிவா, வணக்கம் மலேசிய ஆசிரியர் பத்மநாபன் ஆகியோருக்கும் மாண்புமிகு பாப்பா ராயுடு மற்றும் சுரேந்திரன் கந்தா ஆகியோர் மாலை அணிவித்து சிறப்பு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles