
காளிதாஸ் சுப்ரமணியம்
கோலாலம்பூர் மார்ச் 22-
சரியான தலைவர்களை சமுதாயத்திற்கு அடையாளம் காட்ட வேண்டிய கடமை ஊடகவியலாளர்களுக்கு உள்ளது என்று
மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் கேட்டுக் கொண்டார் .
மலேசிய தமிழ் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் குடும்ப தின விழாவில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி.
கடந்த காலங்களில் பத்திரிகையாளர்களிடையே பல்வேறு பிரிவினைகள் இருந்தது.

ஆனால் இப்போது அந்த பிரிவினைகள் எல்லாம் மறந்து ஊடகவியலாளர்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.
இதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த ஒற்றுமை மேலும் வலுப்பெற வேண்டும்.
தற்போது சூழ்நிலையில் பத்திரிகை துறை என்பது மிகவும் சவாலான துறையாக உள்ளது.
பொருளாதார ரீதியில் உட்பட பல்வேறு சவால்களை ஒவ்வொரு நாளும் அவர்கள் கடந்து வருகின்றனர்.
கடந்த காலங்களில் தலைவர்கள் பத்திரிகைகளை படிப்பார்கள். அதில் வரும் செய்திகளை படித்து தங்களை திருத்திக் கொண்டனர்.
ஆனால் இப்போதைய தலைவர்கள் பத்திரிகைகளை படிக்கிறார்களா என்பது கேள்விக் குறி தான்.

காரணம் அவர்களுக்கு தமிழ் எழுத படிக்க தெரியுமா என்பதும் கேள்விக் குறி தான்.
ஆக நாட்டில் சரியான தலைவர்களை சமுதாயத்திற்கு அடையாளம் காட்ட வேண்டிய கடமை ஊடகவியலாளர்களுக்கு உள்ளது.
அப்படி காட்டவில்லை என்றால் நம் சமுதாயத்திற்கு சிறந்த தலைமைத்துவம் இல்லாமல் போய்விடும் என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.
இதனிடையே நாட்டில் உள்ள பத்திரிகையாளர்களை ஒன்று சேர்ந்துள்ள மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் முத்தமிழ் மன்னன் தலைமையிலான இந்த சங்கத்தை பெரிதும் பாராட்டுகிறேன் என்று அவர் சொன்னார்

