சங்கத்தின் உறுப்பினர்களுக்கு காப்புறுதி திட்டத்தை உருவாக்க மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்கம் முன் வர வேண்டும்! டத்தோஸ்ரீ எம் சரவணன்

காளிதாஸ் சுப்ரமணியம்

கோலாலம்பூர் மார்ச் 22-
நாட்டில் மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்கம் மிகவும் சிறப்பாக இயங்கி வருவது பாராட்டுக்குரியது.

அதே வேளையில் சங்கத்தில் உள்ள அனைவருக்கும் காப்புறுதி அட்டையை பெற்றுக் கொடுப்பதற்கான முயற்சிகளை இந்த சங்கம் மேற்கொள்ள வேண்டும் என்று ம இகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சரவணன் கேட்டுக் கொண்டார்.

மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் குடும்ப தின விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதில் சங்க உறுப்பினர்கள் பெரும் அளவில் கலந்து கொண்டது மகிழ்ச்சியை அளிக்கிறது.

சங்கத்தின் உறுப்பினர்களுக்கு சங்கம் பல வகைகளில் உதவி புரிந்து வருகிறது.

அதேசமயம் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு காப்புறுதி திட்டத்தை உருவாக்க வேண்டும்.

இதன் மூலம் சங்கத்தின் உறுப்பினர்கள் நன்மை அடைவார்கள்.

மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் முத்தமிழ் மன்னன் அவர்கள் தலைமையிலான செயற்குழு உறுப்பினர்கள் இதை கருத்தில் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் குடும்ப தின விழா நேற்று பத்து கேவ்ஸ் ஷாங்கா மண்டபத்தில் மிகப்பெரிய அளவில் நடைபெற்றது.

இந்த விழாவை டத்தோஸ்ரீ எம் சரவணன் அவர்கள் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles