ஆலயம் தொடர்பான பிரச்சினைகள் அதிகரிப்பு; இந்தியத் தலைவர்கள் ஒன்றிணைய நேரம் வந்து விட்டது: மாண்புமிகு குணராஜ் வலியுறுத்து

கோலாலம்பூர், மார்ச் 20-
சமுதாயத்தின் நலன் கருதி இந்திய தலைவர்கள் அனைவரும் ஒரே குடையின் கீழ் ஒன்றிணைய வேண்டும்.

செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு குணராஜ் ஜோர்ஜ் இதனை வலியுறுத்தினார்.

நாட்டில் ஆலயம் தொடர்பான பிர்ச்சினைகள் தொடர்ந்து ஒரு சர்ச்சையாக இருந்து வருகிறது.

இனம், மதம் தொடர்பான விவகாரங்களில் ஒரு சிலர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

இருந்தாலும் இப்பிரச்சினைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை.

காரணம், நாடு முழுவதும் பல ஆலயங்கள் தற்போது பிரச்சினைகளை எதிர்நோக்கி உள்ளது.

இப்பிரச்சினைகளுக்கு நாம் தீர்வு காணவில்லை என்றால் வரும் காலங்களில் இன்னும் பல விபரீதங்களை ஏற்படுத்தலாம்.

ஆக, இந்த ஆலயப் பிரச்சினைகளுக்கு தீர்வுக் காண இந்தியத் தலைவர்கள் ஒன்றிணைய நேரம் வந்து விட்டது.

இனியும் கட்சி உட்பட பல பேதங்களை நாம் பார்த்துக் கொண்டால் அது நம் சமுதாயத்திற்கும் தான் பாதிப்பு என்று அவர் தெரிவித்தார்.

காரணம் மற்ற சமுகத்தினத்தினர் பல வாரியாக பிரிந்து கிடந்தாலும் ஒரு பிரச்சினை என்று வந்து விட்டால் அனைவரும் ஒன்றாகி விடுகின்றனர்.

இந்த மன போக்கு நம் சமூகத்திலும் வர வேண்டும் என குணராஜ் கேட்டு கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles