பினாங்கு இந்தியர் கால்பந்து கிளப் ஏற்பாட்டில் மங்கையராணி கால்பந்து போட்டி!

பிறை மார்ச் 25-
பினாங்கு இந்தியர் கால்பந்து கிளப் மற்றும் பிறை எம்பிபிகே ஆதரவில் மாபெரும் அளவில் மங்கையராணி கால்பந்து போட்டி மிகப்பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மங்கையராணி கிண்ண போட்டிக்கான அதிகாரப்பூர்வ குலுக்கல் கடந்த வாரம் பிறையில் வெற்றிகரமாக நடைபெற்றது.

இந்த போட்டியில் 15 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கான கால்பந்துப் போட்டியை PIFC மற்றும் MPKK பேராய் பெருமையுடன் ஏற்பாடு செய்துள்ளன என்று அதன் தலைவர் ஸ்ரீ சங்கர் தெரிவித்தார்

இந்த விழாவில், MBSP மன்ற உறுப்பினர் திரு. பொன்னுதுரை அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

போட்டியின் தனித்துவத்தையும் கௌரவத்தையும் பறைசாற்றும் வகையில், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பிரத்யேக கோப்பை இந்தப் போட்டியின் ஒரு சிறப்பு அம்சமாகும் என்று அவர் சொன்னார்.

போட்டி நடைபெறும் நாள்: 4 ஏப்ரல் 2026 நேரம்: காலை 8:00 மணி முதல்
இடம்: படாங் டத்தோ கிராமட், பினாங்கு

தொடக்க விழாவை பினாங்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் மாண்புமிகு டத்தோஸ்ரீ சுந்தரஜூ அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைப்பார்.

குழு A பிரிவில் கெடா இந்தியன் FA, யுனிவர்சல் FC, கருடா FC & பினாங்கு இந்தியன் FC இடம் பெற்றுள்ளன.

குழு B பிரிவில் ஸ்மார்ட் FC, NS மான் FC, M*R நியூ ஸ்டார் SC & பட்டானி ஜெயா FC இடம் பெற்றுள்ளன.

அணிகள் வெற்றிக்காகப் போராடும் நிலையில், இளம் திறமையாளர்களின் விறுவிறுப்பான ஆட்டத்தை காண பொதுமக்கள் திரண்டு வரும் படி அவர் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles